( வி.ரி. சகாதேவராஜா)

 “சின்னக் கதிர்காமம்” ” தில்லை மண்டூர்” என அழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று(28) வெள்ளிக்கிழமை நடைபெறும்.

இம் மகோற்சவம் 

கடந்த 08.08.2026 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 20 தினங்கள் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வந்தன.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதுவரை வந்து சென்றனர்.

தீர்த்தோற்சவம் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இடம்பெறும்.