ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையின் கடல்பரப்புக்கு அருகில் இருக்கும் ஈரானிய கடற்படை கப்பல் IRIS Bushehr-இல் உள்ள பணியாளர்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அந்தக் கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், கப்பலில் உள்ள 208 பேரையும் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை இலங்கை கடற்படையினர் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தற்போதைய முன்னேற்றம் தொடர்பான சிறப்பு அறிக்கையை வெளியிட்டபோது ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.
- ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையின் கடல்பரப்புக்கு அருகில் இருக்கும் ஈரானிய கடற்படை கப்பல் IRIS Bushehr-இல் உள்ள பணியாளர்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளாரஅதனைத் தொடர்ந்து, அந்தக் கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், கப்பலில் உள்ள 208 பேரையும் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை இலங்கை கடற்படையினர் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு அறிக்கை
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தற்போதைய முன்னேற்றம் தொடர்பான சிறப்பு அறிக்கையை வெளியிட்டபோது ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.
அணிசேரா கொள்கையை இறுக்கமாக கடைபிடிக்கும் அதேநேரம், மனிதாபிமான ரீதியான முன்னெடுப்புகளையும் இலங்கை மேற்கொள்ளும்.
எந்த ஒருநாடும், இலங்கையின் இறைமைக்கு உட்பட்ட பிரதேசத்தை தமது நலனுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது.
நடுநிலையான கொள்கை
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியற்ற நிலை தோற்றம் பெற்றுள்ள நிலையில் இலங்கை நடுநிலையான கொள்கையை பின்பற்றும். இலங்கையின் கடற்பரப்பில் தஞ்சமடைவர்களின் உயிரை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இராச்சியத்துக்கு உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையை குறுகிய அரசியல் இலக்குகளுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.
உலக அமைதியை அடைய அனைத்து தரப்பினரின் அர்ப்பணிப்பு அவசியம் என்று அவர் கூறினார்.

