ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுக் கொண்டிருந்த ஒரு கப்பல் மீது புதிய தாக்குதல் நடத்தப்பட்டது. அதேவேளையில், நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகள் கட்டண விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிக்கலைச் சந்தித்துள்ளன.

இதனால், உலகின் முக்கிய எரிசக்தி வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையின் எதிர்கால நிலை குறித்த நிச்சயமற்ற சூழல் நீடிக்கிறது. இருப்பினும், ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்ற நம்பிக்கையை டிரம்ப் நிர்வாகம் வெளிப்படுத்தி வருகிறது.

அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், செவ்வாய்க்கிழமை CNBC-க்கு அளித்த பேட்டியில், ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அமெரிக்காவும் ஈரானும் புதன்கிழமையிற்குள் ஒப்பந்தம் ஒன்றை எட்டக்கூடும் என்று தெரிவித்தார்.

இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிவடைந்தன.இதனைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். எனினும், இறுதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.