தற்போதைய சூழலைப் பயன்படுத்தி அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு கத்தாரின் அதிரடி நடவடிக்கை – 10 இலட்சம் ரியால் அபராதம்

கத்தாரில் தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, உரிய அனுமதியின்றி விலையை உயர்த்தும் நிறுவனங்கள் மீது வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MoCI) கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி, விலையை அதிகரித்த ஒரு நிறுவனத்திற்கு 10 லட்சம் கத்தார் ரியால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த நிறுவனத்தை 30 நாட்களுக்கு மூட அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் நலனைப் பாதுகாக்கவும், சந்தையில் முறையற்ற விலை உயர்வைத் தடுக்கவும் அமைச்சகம் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் இது போன்ற புகார்களை 16001 என்ற எண்ணிற்குத் தெரிவிக்கலாம்.