(அஸ்லம் எஸ். மௌலானா)
முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினரும் சபையின் எதிரணித் தலைவரும் கிராமிய வங்கியின் முன்னாள் முகாமையாளருமான எம்.எம்.எம்.ஜெமீல் காலமானார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்ட கால செயற்பாட்டாளரான மர்ஹூம் எம்.எம்.எம்.ஜெமீல் அவர்கள், முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்களுடன் இணைந்து கல்முனைப் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக முக்கிய பங்காற்றியிருந்தார்.
1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை பிரதேச சபைத் தேர்தலில் ஐ.தே.க. வேட்பாளராக போட்டியிட்டு, வெற்றியீட்டி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன் அந்த சபையின் எதிரணித் தலைவராகவும் சிறப்பாகச் செயற்பட்டார்.
அன்னார் பிரபல அறிவிப்பாளர்களான மர்ஹும் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, ஏ.ஆர்.எம். நெளபீல் ஆகியோரின் தாய் மாமாவும் அறிவிப்பாளர் ஆசூக் றிம்ஸாத்தின் மாமனாரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஜனாஸா இன்று ஞாயிற்றுக்கிழமை (09) அஸர் தொழுகையின் பின்னர் அட்டாளைச்சேனை ஏசி பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு, எட்டாம் குறிச்சி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது

