மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், காயமடைந்த ஆறு பேர் மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சிறைச்சாலையில் நிலவிய பதற்றத்தைத் தொடர்ந்து, வளாகத்திற்குள் அமைந்திருந்த ஒரு கட்டிடத்தில் பாரிய தீ விபத்தும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.