புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட( பிரதீபா
2025) தேசிய மட்டப்போட்டி அளவெட்டி அருணோதயா கல்லூரியில் கடந்த 2025ஃ10ஃ26 அன்று நடைபெற்றது.
கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சார்பாக
வயலின் ( சிரேஷ்ட பிரிவு) போட்டியில் பங்குபற்றிய த.ஸப்தனா எனும் மாணவி மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் முதலாமிடத்தினைப் பெற்றுள்ளார்.
இவர் பெரியநீலாவணையைச் சேர்ந்த தயாபரன் நிரஞ்சனா ஆகியோரின் புதல்வியாவார். இவர்
தரம் -12( விஞ்ஞான பிரிவு ) கார்மேல் பற்றிமா கல்லூரி கல்விகற்கின்றார்.
இவரின் வெற்றிக்கு பக்கபலமாக செயற்பட்டோர்.
கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி:- திருமதி சர்மிளா சபேஷ்
பயிற்றுவித்த ஆசிரியர்:-
திரு.சுதாகரன் தனுஸ்கரன்
(வளவாளர்,கல்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையம்,
Undergraduate, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம்)
பக்கவாத்திய கலைஞர்
மிருதங்கம் :- திரு.சுதாகரன் லோவிகரன்
(நுண்கலைமாணி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம். முதுகலைமாணி, மகாத்மாகாந்தி பல்கலைக்கழகம் கேரளா இந்தியா)





