இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில்
இருந்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விடு
விக்கப்பட்டார். அவர் அரசமைப்பு கவுன்ஸிலின் உறுப்பினர் பதவியில்
இருந்து இராஜிநாமாச் செய்கின்ற வரைக்கும் தற்காலிக ஏற்பாடாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நாடாளுமன்றக் குழுத் தலைவருக்கான கடமைகளைப் பொறுப் பெடுப்பார் என்று தமிழரசுக் கட்சியின்
பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் தெரிவித்
திருக்கின்றனர்.
