வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கலை நிகழ்ச்சிகளும் கல்முனை மணற்சேனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றுது!
வுhசிப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கலை நிகழ்ச்சிகளும் கல்முனை மணற்சேனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்தில் 28.10.2025 வித்தியாலய அதிபர் கோ.ஹிரிதரன் பிரதி அதிபர் :- திரு.சரவணமுத்து நவேந்திரன் (விவேகவெளி தமிழேந்திரன்) ஆகியோரின் வழிநடத்தலில் சுவாமி விபுலாநந்த வித்தியாலய விபுலம் ஏற்பாட்டுக் குழுவின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.
ஊர்வலம் வித்தியாலய வளாகத்தில் ஆரம்பமாகி மணற்சேனை கிராமத்தை சுற்றி வந்து பாடசாலையை அடைந்தது. இந்த ஊர்வலம்
- சர்வதேச வாசிப்பு மாதத்தை பிரதானப் படுத்தியது.
- வாசிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல்
- மாணவர்களின் பாடசாலை வரவை தூண்டுதல்
- மாணவர்களின் கலை ஆர்வங்களைத் தூண்டுதல்
- சமூகத்தை விழிப்படையச் செய்தல்
- இலைமறைகாய்களாக இருக்கும் மாணவர்கள் ஆசிரியர்களின் திறமைகளை வெளிக்கொணர்தல். வாசிப்பு, பாடசாலை வரவு, கல்வியின் அவசியம், கலைகளின் அவசியம் முதலான விடயங்கள் பிரதானப்படுத்தி இரு நிகழ்வுகளும் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருந்தது.
பாடசாலை வளாகத்தில் ,டம் பெற்ற நிகழ்வில் நடன ஆசிரியை :- திருமதி லோஜி மொஜீபன் ஒழுங்கமைப்பில் வரவேற்பு நடனம் கும்மி நடனங்கள் மாணவர்களினால் இடம்பெற்றன.
ஊர்வல நிகழ்வில் மாணவர்கள் வாசிப்பு மாத பதாகை, வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி எழுதிய அட்டைகளை ஏந்தி ஆடியும் பாடியும் கோசங்கள் எழுப்பியும் இந்த ஊர்வலம் ,டம் பெற்றது.
(3) வித்தியாலய விபுல விநாயகருக்கு எழுதப்பட்ட பக்திப் பாடல் ஒலிக்கச் செய்யப்பட்டது.
(1) திரியினிலே ஒளிராத நீபங்களே…
(விவேகவெளி தமிழேந்திரன்)
(2) எழுதுவோமே எழுதுவோமே எழுந்துவாடா தம்பி…
(விவேகவெளி தமிழேந்திரன்)
(3) புத்தகங்களே கேளுங்களே…
(திருமதி ஜு. கிங்ஸ்லி ஆசிரியை) ஆகியோரது பாடல்கள் ஒலிக்கச் செய்யப்பட்டன.
வி.டசோமிதன் (தரம் 6) மாணவனின் வாசிப்பு பற்றிய படித்துச் சுவைத்த கவிதை, திருமதி நளாயினி விவேகாந்ந்தன் ஆசிரியையது வாசிப்பின் முக்கியத்துவம் பற்றிய பேச்சு, அதிபரின் கல்வி, வாசிப்பு, சமூக முன்னேற்றம் பற்றிய பேச்சு என்பவை இதன் போது இடம் பெற்றன.




























