புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடா த்தப்பட்ட( பிரதீபா 2025) போட்டியில் கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சார்பாக பங்குபற்றிய செல்வி வெ. லக்சயா மாகாண மட்டத்தில் முதலாமிடத்தையும் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

தேசிய மட்டப்போட்டி அளவெட்டி அருணோதயா கல்லூரியில் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்றது. மாகாண மட்டப்போட்டி 27.09.2025 மருதமுனை ஷம்ஸ் கல்லூரியிலும் இடம் பெற்றிருந்தது.

இந்த மாணவி நடன ஆசிரியரான பரத கலாவித்தகர் செல்வி லோஜிகா கமலநாதன் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டிருந்தார்.

கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் தரம் 13 கலைப்பிரிவில் கவ்விகற்றும் இவர் நற்பிட்டிமுனை வெற்றிவேல் ஜீவராணி தம்பதிகளின் புதல்வியாவார்.

இவரின் இந்த வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்கள்

பயிற்றுவித்த ஆசிரியர் – பரத கலாவித்தகர் செல்வி லோஜிகா கமலநாதன்

கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி- திருமதி சர்மிளா சபேஷ்

பக்கவாத்திய கலைஞர்கள்:

நட்டுவாங்கம் – பரதகலாவித்தகர் செல்வி.லோஜிகா கமலநாதன்

வாய்பாட்டு – முதுகலைமாணி. சுரேந்திரா நரேந்திரா

மிருதங்கம் – முதுகலைமாணி.நுண்கலைமாணி
S.லோவிகரன்

வயலின்-S. தனுஸ்கரன்

புல்லாங்குழல்- R.சேதுமாதவன்