பெரியநீலாவணையில் சர்வதேச சிறுவர்தின விளையாட்டு விழா.

செல்லையா-பேரின்பராசா 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பெரியநீலாவணை கலைவாணி முன்பள்ளி ஏற்பாடு செய்து நடாத்திய சிறுவர் விளையாட்டு விழா 30.09.2025 பிற்பகல் 02.30 மணியளவில் பெரியநீலாவணை பெரியதம்பிரான் ஆலய முன்றலில் முன்பள்ளி ஆசிரியைகளான என்.நிரோஜா, ஆர்.சிவானி ஆகியோரின் இணைத் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நடராசா ரமேஸ், முன்பள்ளி அபிவிருத்தி ணிப்பாளர் ஐ.எல்.எம்.அனிஸ் ,  முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆயிஜா ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இவ் விழாவில் முன்பள்ளி சிறார்கள் மற்றும் பெற்றோர் பங்குபற்றிய பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சகல முன்பள்ளி மாணவர்களும் பரிசில்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.