திருமதி ரிசா கமலினி பத்தரன அவர்கள் தனது 33 வருட கல்விச்சேவையில் இருந்து 29.09.2025 அன்று ஓய்வு பெற்றார்
1965 இல் கல்முனையில் பிறந்த இவர் ,கமு /கார்மேல் பற்றிமா
கல்லூரி( தேசிய பாடசாலை) யில் கல்வி பயின்றார் பாடசாலை காலங்களில் சிறுவயதில் இருந்தே நடனக் கலையில் ஆர்வம் கொண்ட இவர் பாடசாலை நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி,போட்டியிட்டு வெற்றி பெற்று பரிசில்களையும், சான்றிதல்களும் பெற்றார்.
பின்னர் சுவாமி விபுலானந்தா அழகியல்கற்கை நிறுவனத்தில் நான்கு வருடங்கள் நடனத்தைக் கற்று 1992 இல் கமு/ உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் நடன பாட ஆசிரியராக நியமனம் பெற்றார்.
இவர் பல மாணவர்களை இக்காலங்களளில் தேர்ச்சி மிக்கவராக உருவாக்கினார். இவர் பயிற்றுவித்த மாணவிகள் பலர் மாகாண தேசிய மட்டங்கள் வரை சென்று தங்கள் திறமையை நிரூபித்தனர். கலை, தன் பாரம்பரியத்தை இழக்கலாகாது என்ற கருத்தினை கொண்ட இவர், நவீன நாட்டிய முயற்சிகளில் ஈடுபட்டு அடையாளப்படுத்தினார் .
இவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் பலர் ஆசிரியர்களாகவும், பெரும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் ஆகவும் இன்று விளங்குகின்றன. பின்னர் 2002 ஆம் ஆண்டில் கல்முனை கல்வி வலயத்தின் நடன பாடத்திற்குரிய ஆசிரிய ஆலோசகராக நியமனம் பெற்று இப்பிரதேசத்தின் கலை சார் செயற்பாடுகளில் முக்கிய பங்கு வகுத்தார் 2013 ஆம் ஆண்டில் கல்முனை வலய அழகியல் பாட (நடனம் ,சங்கீதம், நாடகம் , சித்திரம்) இணைப்பாளராக நியமிக்கப்பட்டு இன்றுவரை சேவையாற்றி வருகின்றார்.
தமிழ் மொழி தினம் தேசிய மட்ட நடுவராகவும் பணியாற்றியதுடன் புதிய கலைத்திட் மாற்றங்களில் எழுத்தாளர் குழு, மீளாய்வுக் குழு என்பவற்றில் பணியாற்றுகின்றார். கல்வி சார்ந்த முக்கிய பயிற்சி அரங்குகளில் வளவாளராக இருந்து வருகின்ற
இவர் சமூக ,சமய செயற்பாட்டாளராகவும் தனது சேவையை புரிகின்றார்.


