துறைநீலாவணை சித்திவிநாயகர் பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு.

செல்லையா-பேரின்பராசா 

புலம்பெயர்ந்து கனடா தேசத்தில் வாழும் துறைநீலாவணை உறவுகள் துறைநீலாவணை சித்திவிநாயகர் பாடசாலைக்கு நிழல் பிரதி எடுக்கும் இயந்திரம் (போட்டோ கொப்பி மெசின்) ஒன்றை இப் பாடசாலை அதிபர் ஆர் கருணாவிடம் அன்பளிப்பு செய்துள்ளனர்.

 கனடா வாழ் துறைநீலாவணை உறவுகளான ப.கயிலாயமூர்த்தி செ.சபேசன் வே.பத்மநாதன் சா.தயாளன் பி.சிவபாலன் எம்.பிரதீபன் எஸ்.பிரசாந்தன் ஆகியோர் இந்த கைங்கரியத்தினை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.