மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ சுந்தரேஸ்வரருக்கு கன்னி பாற்குடபவனியும், சங்காபிஷேகமும்

( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் பரிவார ஆலயமான ஸ்ரீ சுந்தரேஸ்வரர்  ஆலயத்திற்கான முதலாவது பாற்குடபவனியும்,  முதலாவது சங்காபிஷேகமும் நேற்று (23) செவ்வாய்க்கிழமை சிறப்பாக இடம் பெற்றது .

ஆலய குரு சிவஸ்ரீ சபா கோவர்த்தன சர்மா, கும்பாபிஷேக  பிரதம குரு சிவஸ்ரீ இரத்தின மகேஸ்வரக்குருக்கள்,  மற்றும் குரு சிவஸ்ரீ க.கு. சபாரத்தின குருக்கள் ஆகியோர் கிரியைகளுடன் சிறப்பாக நடைபெற்றது .

முன்னதாக பாற்குடபவனி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்திற்கு பவனி வந்தது.

ஆலயத்தை நிர்மாணித்துக் கொடுத்த அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த திருமதி கமலாதேவி விவேகானந்தம் குடும்பத்தினர் ரஞ்சன் அகந்தினி தம்பதியினர் அங்கே பொன்னாடை  போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்த முதல் நிகழ்வானது ஆலய பரிபாலன சபைத் தலைவர் கே. ஜெயசிறில் உள்ளிட்ட பரிபாலன சபையினர் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.