செல்லையா-பேரின்பராசா 

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் இணைந்து இப் பிதேச செயலகப் பிரிவிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான சிறுகதை பயிற்சி பட்டறையினை 25.09.2025 ஆந் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் க.கருணாநிதி தலைமையில் இடம்பெற்ற இந்த சிறுகதை பயிற்சிப் பட்டறையின் பிரதம வளவாளர்களாக ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளரும் இலக்கிய விமர்சகரும் தென் கிழக்குப் பல்கலைக் கழக வருகைதரு விரிவுரையாளருமான முனைவர்.சத்தார்.எம்.பிர்தௌஸ் ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் வித்தகர்  பைந்தமிழ்க் குமரன் ஜெ. டேவிட் ஆகியோர் கலந்து கொண்டு சிறுகதைப் பயிற்சிப் பட்டறையினை சிறப்பாக நடாத்தினார்.

இந்த. சிறுகதை பயிற்சி பட்டறையினை கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.வ.பற்பராசா ப.ராஜதிலகன் திருமதி பத்தகௌரி.மயூரவதனன் ஆகியோர் மிகவும் சிறப்பானமுறையில் ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.