அகத்திய மாமுனிவரின் பாதம் பட்ட திருகோணமலை மூதூர் கங்குவேலி ஆதிசிவன் தேவஸ்தான வருடாந்த ஆடி அமாவாசை திர்த்தோற்ஸவ விஞ்ஞாபனம் .2025


அகத்திய மாமுனிவரின் பாதம் பட்டதும், சிவன் தனது திருவாக்கின் பிரகாரம் அகத்திய மாமுனிவர் மூலம் விரும்பி குடி கொண்டதும், கரைபுடண்டோடும் மகாவவி கங்கையை நாட்புறமும் வேலியாக கொண்டதுமான கங்கைவேலி எனும் திருநாமம் கொண்ட வரலாற்று சிறப்பு பெருமைமிக்க புண்ணிய பூமியில் இயற்கை எழில் கொஞ்சம் பசுமை மிகு நெல் வயல்கள் சூழ வீற்றிருந்து அருளாச்சி புரிகின்ற திருகோணமலை மூதூர் கங்குவேலி ஆதி சிவன் தேவஸ்தானத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் அகத்திய மா முனிவர் தீர்த்தமாடிய புனித மகாவலி கங்கை கரையில் வெகு சிறப்பாக இடம் பெற திருவருள் கூடியுள்ளது.

அதற்கு அமைய 23 /7 /2025 புதன்கிழமை சுவாமி ஆலயத்தில் இருந்து எழுந்தருளி புனித மகாவலி கங்கையை சென்றடைவார் .

24/ 7/ 2025-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை புனித தீமிதிப்பு வைப்பவமும், திருப்பொற் சுண்ணம் இடிக்கின்ற நிகழ்வும், அதனைத் தொடர்ந்து தொன்மையும் அருளும் நிறைந்த ஆடி அமாவாசை தீர்த்த உற்சவமும் இடம்பெற்று அன்னதானமும் வழங்குகின்ற நிகழ்வும் இடம்பெறும்.

ஆடி அமாவாசை தீர்த்து உற்சவத்தின் தத்துவத்தை உணர்த்தும் எள்ளுநீர் இறைத்து பிதிர் கடன் செய்யும் நிகழ்வுக்கு சிறப்பு வாய்ந்த இடமாக கருதப்படுகின்ற அகத்திய மாமுனிவர் தீர்த்தமாடிய புனித மகாவலி கங்கை கரையில் அதற்கான விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. எனவே அடியார்கள் அனைவரையும் ஆதிசிவன் ஆலயத்திற்கு வருகை தந்து அருள் பெற்றியுமாறு அன்புடன் அழைக்கின்றனர் கங்குவேலி ஆதி சிவன் தேவஸ்தான பரிபாலன் சபையினர்.