காரைதீவிற்கு பொலிஸ் அத்தியட்சகர் கலனசிறி விஜயம்.!
மரியாதை அணிவகுப்பிலும் பங்கேற்பு!
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.பி.எச்.கலனசிறி காரைதீவு பொலீஸ் நிலையத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
அம்பாறை கரையோரப் பிரதேச புதிய பொலீஸ் நிலையங்களுக்கான விஜயத்தின் ஓரங்கமாக காரைதீவுக்கு விஜயம் செய்தார்.
காரைதீவு பொலிஸ் நிலையத்திற்கு அவர் நேற்று முன்தினம் (19) சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் விஜயம் செய்தார்.
முதலில் அங்கு கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2025 ஆண்டிற்கான பரிசோதனை விபுலானந்தா மைதானத்தில் இடம்பெற்றது.
முதலில் விபுலானந்தா மைதானத்திற்கு சமூகமளித்த அவரை காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.ஜகத் வரவேற்று, அணிவகுப்பு மரியாதையை நடாத்தினார்.
பின்னர் அவர் பொலிஸ் நிலையத்தையும் பார்வையிட்டார்.
மேலும், பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள், சுற்று சூழல் ,பொலிஸ்உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகளை பார்வையிட்டதுடன், பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.
இவ் விஜயம் தொடர்பாக நிலைய பொறுப்பதிகாரி ஜகத் , பொலிஸ் அத்தியட்சகர் கலனசிறிக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.











