இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவறதின நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணையில் சுவாமி விபுலாநந்த வீதிக்கு பெயர் பதாதை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (11) சிறப்பாக இடம் பெற்றது


கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் திரு T.J அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உயர்திரு ய. அநிருத்தனன் கலந்துகொண்டதுடன், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் திரு. கு. ஜெயராஜி உட்பட நெக்ஸ் ரெப் சமூக அமைப்பின் ஆலோசகர் திரு கண. வரதராஜன், அமைப்பின் தலைவர், உறுப்பினர்கள்,ஆலயதர்மகர்த்தாக்கள், அறநெறிப்பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் இந்துகலாசார கல்முனை வடக்கு பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


பெரியநீலாவணையின் அனைத்து அறநெறிப்பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பொது மக்களின் பங்களிப்புடன் சுவாமியின் திருவுருவம் தாங்கிய ஊராவல நிகழ்வும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.