பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார், ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நாளை (13) இரத்ததான முகாம்!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் காணப்படும் குருதித்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு நாளை 13.05.2025 செவ்வாய்க்கிழமை இரத்ததான முகாம் ஒன்று பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார், ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் வழிநடத்தலில் பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார், ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலய இந்து இளைஞர் மன்ற அலுவலகத்தில் (திரௌபதை அம்மன் ஆலய வீதி பாண்டிருப்பு – 02 )நாளை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை இடம் பெறவுள்ள இரத்ததான முகாமில் அனைவரும் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்குமாறு அழைக்கப்படுகின்றனர்.