பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆலய வருடாந்த மஹோற்சவம்; நாளை சங்காபிஷேகம்!
பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 03.05.2025 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நாளை 07.05.2025 1008 சங்காபிஷேகம் இடம் பெறும். பத்தாம் திகதி வேட்டைத்திருவிழா இடம் பெற்று 12.05.2025 திங்கட் கிழமை காலை தீர்த்தோற்சவம் இடம் பெற்று உற்சவம் இனிதே நிறைவு பெறும்.
