கல்முனை ஆதார வைத்தியசாலையில் “உலக கைகழுவும் பொறிமுறை தின”
“World hygiene day” நிகழ்வு.

இந் நிகழ்வானது பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில் நேற்று 05.05.2025 நடைபெற்றது.
இதனை ஒட்டிய விழிப்புணர்வு நிகழ்வாக நடைபெற்ற உத்தியோகஸ்தர்களின் சித்திரக் கண்காட்சியும் இடம்பெற்றது. கையுறை அணிந்தாலும் கை கைகழுவுதல் அவசியம் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் தொனிப்பொருளை அடிப்படையாக கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் தரம் கணிக்கப்பட்டு  தெரிவின் மூலம் பரிசில்கள் வழங்கப்பட உள்ளது.  

   

இது பற்றி பணிப்பாளர் கூறுகையில்,
World hygiene Day தொற்றிலிருந்து நோயாளியை பாதுகாப்பதும், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பிற்கும் உரியதாகும்    உலக கைழுவுதல் தினம் ஐப்பசி 10 உலக  கைகழுவும் பொறிமுறை தினம் (World hygiene day) சித்திரை 5. இவை இரண்டும் வேறான தினங்களில் நடைபெறுகிறது .


இங்கு இரண்டும் இணைந்த ஓவியங்களே வரையப்பட்டுள்ளது. எனினும் இதில் பங்கு பற்றிய அனைவருமே வெற்றியாளர்களே. ஏனெனில் எமது சமூகத்திற்கு உங்கள் கருத்தை எளிமையான ஓவியம் மூலம் வெளிப்படுத்தியுள்ளீர்கள். எமது குறுகிய கால ஒழுங்கை ஏற்று அதற்கு ஒத்திசையும் உங்கள் மனப்பாங்கிற்கு நன்றிகளை தெரிவிக்கிறேன் என்றார்.

மேலும் கோரோனா காலப் பகுதியில் இக் கைகழுவுதல், கைகழுவும் பொறிமுறைகள் என்ற விடயங்களை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இருந்து மிக நுட்பமாக மக்கள் மையப்படுத்தி தொற்றை கல்முனை பிராந்தியத்தில் கட்டுப்படுத்தியவர் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம்  குணசிங்கம் சுகுணன் அவர்கள் என்பதை நினைவு படுத்துகிறோம். 

(கைகழுவும்  பொறிமுறை  வீடியோக்களுக்கு இங்கே அழுத்தவும்👇)