கமு/ கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை 2003 ம் வருட உயர்தர வகுப்பு பழைய மாணவர்களது சீருடை அறிமுகமும் ,ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வும்.

-பிரபா –

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக 2003 ம் வருடத்தில் உயர்தரத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களது சீருடை அறிமுகமும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வும் கடந்த சனிக்கிழமை (26) பாடசாலையின் கிளணி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.


திருமதி றெஜிந்ரா ரவிவர்மன் ( Batch Coordinator) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பாடசாலையின் அதிபர் அருட் சகோதரர் S.E.ரெஜினோல்ட் கலந்து சிறப்பித்தார், நிகழ்வில் பிரதம அதிதி அவர்களால் 2003 ஆம் வருட உயர்தர வகுப்பு பழைய மாணவர்களுக்கான சீருடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டு மாலையிட்டு வரவேற்கப்பட்டதோடு அவர்கள் ஒவ்வொருவருக்கும் நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர், மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், 125 ஆம் வருட JUBILEE குழு செயலாளர், உட்பட 2003 ஆம் வருட உயர்தர வகுப்பு பழைய மாணவர்கள் அனைவரும் கலந்து நிகழ்வை சிறப்பித்து இருந்தனர்.