கோவிலூர் செல்வராஜனின் ” கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்” நூல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பால் வெளியிடப்பட்டது!

பன்முக ஆளுமை இலக்கியவியலாளர் கோவிலூர் செல்வராஜன் எழுதிய ” கிழக்கிலங்கையின் மறைந்த சில இலக்கிய ஆளுமைகள்” நூல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பினால் 24.06.2023 நேற்று வெளியீட்டு வைக்கப்பட்டது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஓய்வுநிலை அதிபர் கா. சந்திரலிங்கம் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வே. ஜெகதீசன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நூல் வெளியீட்டுரையை வே. அரவிந்தன், வாழ்த்துரை தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும் கல்முனை நெற் பிரிமாணம் பிரதம ஆசிரியரும் சிரேஸ்ட்ட ஊடகவியலாளருமான க. குணராசா, நூல் அறிமுக உரையை சஞ்சீவி சிவகுமார், ஆகியோர் வழங்கியதோடு அதிதிகள் உரையை தொடர்ந்து நூலாசிரியர் பதிலுரை நிகழ்த்தினார்.
நிகச்சியை பாசம் புவி தொகுத்து வழங்கினார். செல்லத்துரை சுரேஸின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

கல்முனை நெற் பரிமாணம் பத்திரிகையில் இதுவரை வெளிவந்த கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் வாழ்ந்து மறைந்த இலக்கிய ஆளுமைகள் 38 பேரின் குறிப்புகள் அடங்கியதாக முதற்கட்ட ஆவணமாக இந்த நூல் வெளி வந்துள்ளது அடுத்த பாகமும் ஏனையோரின் குறிப்புக்களுடன் வெளியிடப்படும் என நூலாசிரியரும், கல்முனை நெற் குழுமத்தினரும் தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் மறைந்த இலக்கிய ஆளுமைகளின் குடும்ப உறவினர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என பலர் பங்குபற்றியிருந்தனர்.

இந் நிகழ்வுக்கு இலக்கியவியலாளர் அமரர் முகில்வண்ணன் நினைவாக அவரது பிள்ளைகள் அனுசரனை வழங்கியிருந்தனர்.

You missed