தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி மற்றும் தமிழர் தாயக பகுதிகளில் இடம் பெறும் திட்டமிடப்பட்ட நில ஆக்கிரமிப்பு எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்குக் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளினால் கடந்த 4ம் திகதி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் பேரணி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகியது.

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி தமிழர்களின் குரலாக ஒலித்துக் கொண்டு வரும் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்த்திற்கு வலுச் சேர்க்கக் கடந்த வாரம் முதல் பல முன்னெடுப்புகளைச் செய்து நாளை திருக்கோவிலில் ஒன்று கூடிப் பேரணியாக மட்டக்களப்பு நோக்கிச் செல்லத் தயாராகிய நிலையில் அதற்காக முன்னிலை வகித்த அம்பாரை மாவட்ட காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி அவ் அமைப்பின் ஆலோசகர் இளைஞர் சேனையின் முன்னாள் தலைவர்) தாமோதரம் பிரதீவன் (சிவில் சமூக செயற்பாட்டாளர் ) இளைஞர் சேனை அமைப்பின் தலைவர் நடராஜா சங்கீத் இளைஞர் சேனை அமைப்பின் உப தலைவர் மனோரஜன் டிலக்சன் மற்றும் துரையப்பா விஷ்ணுகாந்தன் (சிவில் சமூக செயற்பாட்டாளர்) ஆகியோருக்கான தடை உத்தரவுகள் கல்முனை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளுக்கும் அறவளி போராட்டங்களுக்கும் முன்னிருப்பவர்களுக்குமான தடை உத்தரவுகளை வழங்கி அவர்களது கருத்து சுதந்திரங்களையும் தன்னிச்சையாக போராடும் இளைஞர்களுக்கு எதிராகவும் இவ்வாறான நிகழ்வுகளுக்கு முன்னிப்பவர்களுக்கு எதிராகவும் தடை உத்தரவுகளையும் பிறப்பிப்பது ஒரு ஜனநாயக நாட்டின் ஒரு தனி மனிதருக்கு உள்ள சுதந்திரத்தை இவ்வாறான தடை உத்தரவுகள் மூலமாக தடுப்பது என்பது ஜனநாயகத்தின் சாபமாக பார்க்கப்படுகிறது.