முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு குருக்கள் மடம் ( ADVRO ) முதியோர் இல்லத்தில் இன்று(06) நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகள்.
முதியோர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக. தேசிய முதியோர் அலுவலகத்தின் அனுசரணையோடு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இன்றைய தினம் குருக்கள் மடத்தில் அமைந்துள்ள அம்பாரை மாவட்ட விபுலாநந்த புணர்வாழ்வு அமைப்பின் (ADVRO) முதியோர் இல்லத்தில் இந்து சமய சிறப்பு நிகழ்வுகளை நடத்தி இருந்தது.
இல்லத்தின் முகாமையாளர் கலாபூசணம் கே. சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு ஆதர வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் குண சுகுணன் அவர்கள் கலந்து கொண்டதோடு. சமூக சேவை உத்தியோகத்தர், மட்டக்களப்பு இந்து சமய கலாச்சார உத்தியோகத்தர், மட்டக்களப்பு மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர், தென்எருவில் பற்று முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர், மட்டக்களப்பு மாவட்ட முதியோர் சம்மேளன தலைவர் உட்பட பல அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
சிறுவர்களின் வரவேற்பு நடனம், உட்பட பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகளோடு. ADVRO முதியோர் இல்லத்தை சார்ந்த முதியோர்களினால் ஓரங்க நாடகம், வள்ளி திருமண கும்மி நடனம், போன்ற சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது. ஆன்மீக குரு பவித்திரன் அவர்களால் இறைபூசை நிகழ்வு நடத்தப்பட்டு மதியபோசனத்துடன் நிறைவுபெற்றது.














