கல்முனை உவெஸ்லி மாணவன் சாதனை

தெரண ஊடக வலையமைப்பு மற்றும் சிக்னல் நிறுவனம் இணைந்து நடாத்திய “ஆகாயத்தில் ஒரு பயணம்” தேசிய மட்ட சித்திர போட்டியில் கல்முனை உவெஸ்லி உயர் தர பாடசாலை மாணவன் ஜீ.கதுஷாத் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஒக்ரோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினத்தினை வெகு சிறப்பாக வானில் கொண்டாடும் முகமாக நடைபெற்ற சித்திர போட்டியில் இலங்கையில் 25 மாவட்டங்களிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 250 மாணவர்களில் இவரும் ஒருவர். குறிப்பாக 220 சிங்கள மொழி மூல மாணவர்களும், 30 தமிழ் மொழி மூல மாணவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளும் இம்மாணவனுக்கான ஓவியப் பயிற்சியை தேசிய கலைஞரும், ஓவிய ஆசிரியருமான கலைஞர்.ஏ.ஓ.அனல் வழங்கியிருந்தார்.

இலங்கையில் முதன் முதலாக இரண்டு மணித்தியாலங்கள் ஆகாயத்தில் ஒரு பயணம் அழகிய தருணத்தை கொண்டாடும் முகமாக ஒரு மாணவருக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவு செய்யப்படுவது விசேட அம்சமாகும்.