வெற்றிக்களிப்பில் காலணியில் குடிபானம் ஊற்றி குடித்த அவுஸ்திரேலிய வீரர்கள்

''

இருபதுக்கு 20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எட்டு விக்கெற்றுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றியைத் தனதாக்கிய சந்தோசத்தில் அணிவீரர்கள் தமது காலணியில் குளிர்பானத்தை ஊற்றிப் பருகியுள்ளனர். இவ்வாறு காலணியில் குளிர்பானம் ஊற்றிப் பருகிய புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைத் தளங்களிலும் வைரலாகி வருகின்றன. வெற்றிக்குப் பின்னர் அவுஸ்திரேலிய அணியினர் தங்கள் ஓய்வறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அணியின் விக்கெட் காப்பாளர் மேத்யூ வேட் மற்றும் சகலதுறை வீரர் […]

எரிக்கின் ஹெடரின் கோலால் சீசெல்ஸ் அணி வெற்றி

''

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடரின் நான்காவது லீக் போட்டியில் சீசெல்ஸ் வீரர்கள் இலங்கை அணியை 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டு, தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தனர். ஏற்கனவே தமது முதல் போட்டியை இரண்டு அணிகளும் சமப்படுத்திய நிலையில், கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் சனிக்கிழமை (13) இடம்பெற்ற இந்த போட்டியில் களமிறங்கின. ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இலங்கை அணி வீரர்கள் […]

மஹேல ஜயவர்தனவிற்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி

''

கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரும் பங்களிப்பை செய்த வீரர்களுக்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன இடம்பிடித்துள்ளார். இதற்கு முன்னர் இந்த பட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஆகியோர் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன்படி ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடிக்கும் மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை மஹேல […]

ஆசியக் கால்ப்பந்தாட்ட கிண்ண போட்டித் தொடரில் இன்று கட்டாரை எதிர்கொள்கிறது இலங்கை..

''

ஆசியக் கால்ப்பந்தாட்ட கிண்ண 23 வயதுக்குட்பட்ட தகுதி காண் போட்டித் தொடரில் சிரியா அணியுடனான போட்டியில் 5ற்கு 0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த இலங்கை தனது இரண்டாவது போட்டியில் இன்று கட்டாரை எதிர்த்தாடவுள்ளது. இப்போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. கட்டார் நாட்டுத் தலைநகரான தோஹாவில் நடைபெறும் ஏ குழுவிற்கான தகுதிகாண் போட்டித் தொடரில் இலங்கை, கட்டார், ஜேர்மன், சிரியா ஆகிய நாடுகளின் 23 வயதிற்குட்பட்ட […]

இலங்கை டெஸ்ட் அணியின் முதலாவது தலைவர் வந்துல வர்ணபுர காலமானார்.

''

இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர இன்று காலமானார். கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1953 மார்ச் 01ஆம் திகதி பிறந்த அவர் தனது 68ஆவது வயதில் இன்று (18) காலமானார். இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்த அவர், வர்ணனையாளராகவும் செயற்பட்டு வந்தார். சிறந்த உபாயங்களைக் கையாண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் வலு […]

இலங்கை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் ஒக். 20இல் ஆரம்பம்!

''

இலங்கை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி தளர்த்தப்படவிருக்கும் நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதியன்று உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதம் […]

பதவி விலகினார் சமிந்த வாஸ் !

''

பதவி விலகினார் சமிந்த வாஸ் ! ஊதியம் அதிகரிக்க மறுத்த Sri Lanka Cricket விலகிய வாஸ். இலங்கை கிரிக்கெட் அணிக்கான பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகிய சமிந்த வாஸ், அது தொடர்பாக தமது விளக்கத்தை வழங்கியுள்ளார். தாம் தாழ்மையான கோரிக்கை ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் முன்வைத்ததாகவும் எனினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் இதைத் தவிர வேறு எதையும் கூறமுடியாது என்றும் அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். […]

IPL 2021: யார் இந்த ஜேமீசன்…15 கோடி கொடுத்தது ஏன் தெரியுமா?

''

IPL 2021: யார் இந்த ஜேமீசன்…15 கோடி கொடுத்தது ஏன் தெரியுமா?   ஐபிஎல் ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த புதுமுக வீரர் கைல் ஜேமீசனை ஏலம் எடுக்கப் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் கடும் போட்டி போட்டன. 75 லட்சம் என ஆரம்பித்து படிப்படியாக 10 கோடியை தாண்டி இரு அணிகளுக்கும் இடையில் மாறிமாறி ஏலம் கேட்ட நிலையில், இறுதியில் ராயல் […]

பார்வையாளர்கள் இல்லாமலே அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் .

''

பார்வையாளர்கள் இல்லாமலே அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் . விக்டோரியா மாநில அரசு நேற்று இரவிலிருந்து புதன்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு விக்டோரியா மாநிலம் முழுவதும் நாலாம் நிலை நிலை முடக்க நிலையை அறிவித்தது. இதில் மக்கள் ஓன்று கூடுவது விளையாட்டு நிகழ்வுகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மாநில முதல்வர் ஆண்ட்ரூஸ் கூறியிருந்தார். அதனடிப்படையில் கடந்த திங்கட்கிழமை தொடங்கிய அவுஸ்திரேலிய ஓப்பன் (Australia open ) ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் […]

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: அவுஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் முன்னிலை

''

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்:அவுஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் முன்னிலை. இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் ஜெயித்த அவுஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெய்ன் முதலில் துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தார். இதன்படி முதலாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்களை எடுத்தது. இதன்பின்பு […]