இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இன்று (சனிக்கிழமை) இரவு 7மணிக்கு ராஜ்கோட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இலங்கை அணிக்கு தசுன் சானக்கவும் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் தலைமை தாங்கவுள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

எனவே தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இன்றைய மூன்றாவது போட்டியில், இரு அணிகளும் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கவுள்ளன.