இலங்கையிடம் சுருண்டது பாகிஸ்தான் : ஆசிய கிண்ணத்தை வென்றது இலங்கை!

நடைபெற்ற ஆகிய கிண்ண போட்டித் தொடரில் இலங்கை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது.

டுபாயில் இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி ஆறாம் தடவையாக சாம்பியன் பட்டம் வென்றது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

ஓட்டங்கள்
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 3 ஆறு ஓட்டங்கள் மற்றும் 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்க 21 பந்துகளில் 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

ஆறாவது தடவையாக ஆசியாவில் சம்பியனானது இலங்கை | Sports Cricket Sri Lanka Vs Pakistan Asia
தனஞ்ச டி சில்வா 28 ஓட்டங்கள். பந்து வீச்சில் ஹரிஷ் ரஹூப் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

நஷீம் ஷா, சதாப் கான் மற்றும் இப்திகர் அஹமட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பெற்றுக் கொண்டனர்.

அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண ரி20 தொடர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 171 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியின் சார்பில் ஹாரீஸ் ரவுப் 29 ஓட்டங்களுக்கு மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் மொஹமட் றிஸ்வான் 49 பந்துகளில் 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் பிரமோத் மதுசங்க 4 விக்கட்டுகளையும், வனிந்து ஹசரங்க 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

இறுதியில் இலங்கை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது.