கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் வீழ்ந்த கார்; ஒருவரை காணவில்லை; இருவர் மீட்பு

''

கண்டி, குருதெனிய வீதியில் இலுக்மோதறை பகுதியில் கார் ஒன்று மகாவலி ஆற்றிற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.நேற்றிரவு (27) இடம்பெற்ற இவ்விபத்தின்போது குறித்த காரில் பயணித்த மூவரில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து காரையும் காணாமல் போன நபரையும் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பான மேலதிக […]

சமூக ஊடகங்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை.

''

சமூக ஊடகங்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை. செல்வி வினாயகமூர்த்தி இலங்கையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பொய்யான செய்திகள் மற்றும் வெறுக்கதக்க பேச்சுக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சி பட்டறை (13) சனிக்கிழமை அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. ஜெர்மன் நாட்டு வெளிவிவகார அமைச்சின் செயல்திட்டத்தின் கீழ் டெமோகரசி ரிப்போட்டின் இன்ரநெஸ்னல் ஸ்ரீலங்கா(Democracy Reporting International srilanka) அமைப்பின் அனுசரனையில் இப்பயிற்சி பட்டறை இடம்பெற்றிருந்தது. அம்பாறை மாவட்டத்தில் சமூகமட்டத்தில் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பாடல்களை […]

திருக்கோவில் பிரதேச இளைஞர் கழகங்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு

''

இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சினால் திருக்கோவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான நடாத்தப்பட்ட குழு மற்றும் சுவட்டு நிகழ்ச்சி விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற வீர விராங்கனைகளுக்கு வெற்றி கிண்ணங்கள வழங்கும் நிகழ்வானது நேற்றைய தினம் திருக்கோவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் திருக்கோவில் பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி கே.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் […]

ஒவ்வொரு பெரிய சாதனைகளும் சிறிய முயற்சியிலும் இடைவிடாத உழைப்பிலும் தான் படைக்கப்படுகின்றன- கலிகாலன் திரைப்பட குழுவினர்

''

பாறுக் ஷிஹான் ஒவ்வொரு பெரிய சாதனைகளும் சிறிய முயற்சியிலும் இடைவிடாத உழைப்பிலும் தான் படைக்கப்படுகின்றன. அந்தவகையில் இந்திய சினிமா எனும் பெரும் விருட்சத்தின் அடியில் துளிர்க்கும் எம்மவர் சினிமாவும் ஒரு பெரும் விருட்சமாக வளர வேண்டுமானால் இரசிகர்களின் ஆதரவு எனும் உரமும்  இலாபம் எனும் நீரும் அவசியம் என வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்தார். சிப்ஸ் சினிமாஸ் எனும்   தயாரிப்பு நிறுவனத்திற்கூடாக ‘கலிகாலன்’ எனும் சிறிய திரைப்படத்தினை  தயாரித்துள்ள […]

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 60 பேருக்கும் 9 திகதிவரை தொடர்ந்து விளக்கமறியல்

''

-கனகராசா சரவணன்–உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்த 60 பேரையும் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்  ஏ.சி.எம்.றிஸ்வான் காணொளி மூலமாக   இன்று வியாழக்கிழமை (25; திகதி உத்தரவிட்டார்.கடந்த 21.4.2019  உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர்; ஸஹ்றான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் […]

கொழும்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஜனாதிபதி கோட்டாயவின் அதிரடி நடவடிக்கை

''

கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பெல் 212 ரக விமானங்கள் மற்றும் ட்ரோன் பயன்படுத்தி இலங்கை பொலிஸாருடன் இணைந்து இலங்கை விமானப்படை கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. கோவிட் தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த பயணத் தடைகள் நீக்கப்பட்டதன் பின்னர் கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதனை அவதானிக்க முடிந்ததாக விமானப்படைப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் நிலைமையை […]

அம்பாரை மாவட்டத்தில் மகா ஓயா பிரதேசத்தில் அதிகூடிய 83.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி

''

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மகா ஓயா பிரதேசத்தில் அதிகூடிய 83.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலைய கடமைநேர அதிகாரி  எம்.ஏம்.எம். அக்மல் தெரிவித்தார். இன்று காலை 8மணியுடன் முடிவடைந்த 24மணித்தியாலங்களுக்குள் ரூபஸ்குளத்தில் 61.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பாணம பிரதேசத்தில் 56.9 லாகுகல 46.7 தீகவாபி 45.0 அம்பாரை 39.3  அக்கரைப்பற்றில் 24.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவு […]

பொது வைத்திய நிபுணரின் சேவை சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் – வைத்தியகலாநிதி ஜி. சுகுணன்

''

பாறுக் ஷிஹான்எதிர்காலத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு ஒன்றை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு ஏற்படுத்துவது தொடர்பில் சாத்தியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம்  இன்று(25) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மீளமைக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகூட திறப்பு விழா மற்றும் ஆய்வுகூட உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் அவர் தெரிவித்ததாவது […]

கிண்ணியா நகரை சபைத் தலைவர் கைது: டிசம்பர் 09 வரை விளக்கமறியல்

''

கிண்ணியாவில் இன்று முழு நாள் துக்கதினம் அனுஷ்டிப்பு கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப்பாதை கவிழ்ந்து 6 பேர் பலியான சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபைத் தலைவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அவருக்கு எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.கிண்ணியா- குறிஞ்சாக்கேணி படகு விபத்துடன் தொடர்புடையதாக  நான்காவது சந்தேக நபரான கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீமை  எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை […]

சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான அரிய வகை இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு (PHOTOS)

''

இலங்கையில் மிகவும் அரிய வகையை சேர்ந்த இயற்கையான பெனகைட் இரத்தினக்கல்லொன்று (Natural Phenakite gemstone) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பெனகைட் இரத்தினக்கற்களில் இது மிகப்பெரியது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது. பேருவளை பகுதியை சேர்ந்த இரத்தினக்கல் வியாபாரியான மொஹமட் பஸ்ரீன் நஸீர் என்பவர் பலாங்கொடையில் இருந்து குறித்த இரத்தினக்கல்லை கொள்வனவு செய்துள்ளார். இந்த நிலையில் குறித்த இரத்தினக்கல்லின் எடை 616.90 கரட் […]