Category: இலங்கை

மீண்டும் மக்களை வரியை யுகத்துக்கு இட்டுச்செல்ல அனுமதிக்க முடியாது – ஜனாதிபதி

எதிர்வரும் காலத்தில் நாம் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த காலங்களில் போன்று மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அடுத்த 10 வருடங்களுக்குள் ஏற்றுமதிசார் பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைய…

சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சிறுவர்கள் மத்தியில் தற்போது மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலினை தொடர்ந்து மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன.காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்குமாயின் உடனே அருகில் உள்ள வைத்தியரை நாடி ஆலோசனைகளைப்…

ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் நாடாளுமன்ற பதவியை இழந்தனர்.

அமைச்சர்களாக செயற்படும் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்து கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக…

சுமார் 4 ஆயிரம் இலங்கையர்களுக்கு தென்கொரியாவில் வேலை வாய்ப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 3ஆயிரத்து 694 இலங்கையருக்கு தொழில் வாய்ப்புகளுக்காக தென்கொரியாவுக்கு சென்றுள்ளனர் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. மேலும் 100 பேர் அங்கு செல்வதற்குத் தயாராகவுள்ளனர் என அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலை…

தமிழ் பொது வேட்பாளராக அரியநேந்திரன்? போட்டியிட வேண்டாம் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை

தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்க பா.அரியநேத்திரனை நியமிப்பதற்குப் பேச்சாளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது எனவும், இதன் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளர் விடயம் தமிழ் மக்களுக்கு பாதிப்பாக அமையும் ஆகவே பொது கட்டமைப்பு இந்த…

நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா (07.08.2024)

வி.ரி.சகாதேவராஜா வரலாற்றில் முதல் தடவையாக நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா நாளை (07) புதன்கிழமை நடைபெறவுள்ளது.ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் முன்னிலையில் ஆலயகுரு சிவஸ்ரீ ச.கோவர்த்தன சர்மா தலைமையில் ஆடிப்பூரத்…

திருக்கோணேச்சரம் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள சட்ட விரோத கடைகள் ஆலயத்தின் அழகை குறைக்கிறது- குகதாசன் எம்.பி

திருக்கோணேச்சரம் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கடைகள் கோவிலின் அழகை சுற்றுலாப் பயணிகள் ரசிப்பதற்கு தடையாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய (06.08.2024) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

பொது வேட்பாளருக்குவன்னியில் ஆதரவு இல்லை – வினோ எம்.பி

தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ரெலோ ஆதரவு வழங்கினாலும் எனது ஆதரவு இல்லை. வன்னி மக்களின் மனங்களை அறிந்தே இந்த முடிவு என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பொது வேட்பாளர்…

நாட்டை மீட்க பிரதமர் பதவியை ஏற்குமாறு அறிவித்தபோது தப்பியோடியது யார்? ரணில் கேள்வி

நாட்டில் பிரதமர் பதவியை ஏற்குமாறு அறிவித்த போது தப்பியோடியது யார் பிரதமர் பதவிக்கு கையேந்தியது போன்று வேறு எந்த நாடாவது உலகில் இருக்க முடியுமா என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கேள்வியெழுப்பியுள்ளார். திருகோணமலை (Trincomalee) மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன்…

தாய், குழந்தை மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கு, வழிகாட்டல் பயிற்சி மட்டக்களப்பு RDHS இல் நடைபெற்றது

( வி.ரி. சகாதேவராஜா) தாய் குழந்தை நேய மருத்துவமனைகளை உருவாக்க மற்றும் மேம்படுத்துவதற்கான பயிற்சி நிகழ்வு சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் நடைபெற்றது . இந் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின்…