-P.S.M-

தாமோதரம் பிரதீவன் எழுதிய ”அம்பாறைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு – 28.12.2025

தமிழ் மணம் கமழும் கல்முனை ” மாநகரில் அம்பாறைத் தமிழர் வரலாற்று சுவடுகள்”

‘இருப்பவை சிறிது இழந்தவை அதிகம்’ ஆம் எமது வரலாற்றில் நாம் இழந்தவை அதிகம்.
அதற்காக எம் உயிரிலும் மேலான   எமது வரலாற்று சுவடுகளை விட்டு நாம் கடந்து செல்ல முடியாது. என்ற இலக்கில்  ‘சைவா அமைப்பின்’ ஒருங்கிணைப்பில்
திரு தாமோதரம் பிரதீபன் (சமூக செயற்பாட்டாளர், வரலாற்று ஆய்வாளர்)
அவர்களின் நீண்ட நாள் ஆய்வின் பயனாக 28.12.2025 இல்
வரலாற்று ஆய்வு நூல் வெளியீடு இடம் பெற உள்ளது.


இடம் -கிறிஸ்த இல்லம் கல்முனை (உவெஸ்லி உயர்தர பாடசாலை அருகாமையில்)
காலம் -பிற்பகல் 2.45 மணி
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள்
மாகாண சபை உறுப்பினர்கள், தவிசாளர்கள்,
உப தவிசாளர்கள், நிருவாக அதிகாரிகள்
வைத்தியத்துறை அதிகாரிகள், பொறியியலாளர்கள்,
கலை , கலாச்சார உத்தியோகத்தர்கள்,எழுத்தாளர்கள்,
ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்,
சைவா அமைப்பின் முதல்வர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், ஆகியோருடன்
இவற்றையெல்லாம் கடந்து இந்திய மண்ணின் தமிழ்நாட்டு ஆய்வாளர்
என பல்வேறுபட்ட பிரமுகர்கள் பங்குபற்றி வெளியீட்டை சிறப்பிக்க உள்ளார்கள்.


இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உறவுகள் அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றார்கள் நூலாசிரியர் திரு தாமோதரன் பிரதீபன் அவர்களுடன்
சைவா அமைப்பினரும்.