Author: Kalmunainet Admin

நினைவேந்தல் தொடர்பாக பொய்யான தகவலை பரப்பியதாக மகிந்தரின் சகா கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா(Renuka Perera) கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது…

ஜனாதிபதிக்கும் தமிழரசுக்கட்சி எம். பிக்களுக்குமிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுத்து வரும்…

மதுபான அனுமதி பத்திரங்கள் தொடர்பான தகவலை வெளியிட்டது அரசு!

அரசியல் லஞ்சமாக வழங்கப்பட்ட மதுபான அனுமதி பத்திரங்கள் தொடர்பான தகவலை சமகால அரசாங்கம் இன்று வெளியிட்டுள்ளது.அதற்கமைய கடந்த அரசாங்கத்தின் போது 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சரும் சபை முதல்வருமான பிலம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் கு.சுகுணன் இன்று கடமையை பொறுப்பேற்றார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் கு.சுகுணன் இன்று கடமையை பொறுப்பேற்றார். கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியகலாநிதி குணசிங்கம் சுகுணன் இன்று 04.12.2024 கடமையை பொறுப்பேற்றார். இவர் கல்முனை மற்றும் மட்டக்களப்பு பிராந்தியங்களின் சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும்…

பத்து நாட்களாகியும் காரைதீவில் தண்ணீர் இல்லை! மக்கள் கொதிப்பு; ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு!!

பத்து நாட்களாகியும் காரைதீவில் தண்ணீர் இல்லை! மக்கள் கொதிப்பு; ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு!! (வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பிரதான பாரிய நீர்க்குழாய் உடைத்தெறியப்பட்ட காரணத்தால் கடந்த பத்து நாட்களாக காரைதீவுக் கிராமத்திற்கு குழாய் நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது.…

பெரியநீலாவணையில் ADVRO வினால் நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு.

பெரியநீலாவணையில் ADVRO வினால் நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு. அம்பாறை மாவட்ட விபுலானந்தா புணர்வாழ்வு அமைப்பு,(ADVRO) ஈழத் தமிழர் வர்த்தக சங்கத்தின் அனுசரணையோடு பெரிய நீலாவணையில் மழை, வெள்ளம் காரணங்களால் நெருக்கடியை சந்தித்த சில…

வெள்ளத்தில் மூழ்கும் மருதமுனை 65 மீட்டர் பகுதிக்கு வடிகான் திட்டம்

வெள்ளத்தில் மூழ்கும் மருதமுனை 65 மீட்டர் பகுதிக்கு வடிகான் திட்டம் (அஸ்லம் எஸ்.மெளலானா) மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கும் மருதமுனை 65 மீட்டர் சுனாமி மீள்குடியேற்றக் கிராம மக்களின் பாதுகாப்பு கருதி கல்முனை மாநகர சபையினால் வடிகான்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இப்பிரதேச…

20 வருடம் கழித்து அந்த உறவுகளுக்கு ஒரு சிறிய கைமாறு. அவ்வளவு தான். காரைதீவு சமூக செயற்பாட்டாளர் லவன் இவ்வாறு கூறுகிறார்.

செவ்வி.. தயவுசெய்து மாலை மரியாதைகளுக்கு அழைக்க வேண்டாம்! .20 வருடம் கழித்து அந்த உறவுகளுக்கு ஒரு சிறிய கைமாறு. அவ்வளவு தான். காரைதீவு சமூக செயற்பாட்டாளர் லவன் இவ்வாறு கூறுகிறார். அண்மையில் காரைதீவில் ஏற்பட்ட பெரும் வெள்ள அனர்த்தத்தின்போது முழு மூச்சாக…

இடைநிறுத்தப்பட்ட  2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை(4) முதல் மீண்டும் ஆரம்பம்!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை(4) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக 27ஆம் திகதி…

நாடாளுமன்றத்தின் நாளைய (04.12.2024) அமர்வை இரவு 9.30 மணிவரை நடாத்த தீர்மானம்

நாடாளுமன்றத்தின் நாளைய (04.12.2024) அமர்வை இரவு 9.30 மணிவரை நடாத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த தீர்மானம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் நாளை மாலை 5.30 மணி…