கல்முனைப் பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவோர் சங்கமும், குருக்கள்மடம் ஆலயங்களின் ஒன்றியமும் இணைந்த ஏற்பாட்டில், குருக்கள்மடம் பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயனார் ஆலய வளாகத்தில் தியான மணி மண்டபத்துடன் கூடிய மஹா சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கான திருப்பணி வேலைகள் இடம் பெற்று வருகிறது
சிவனடியார்களின் நன்கொடைப் பங்களிப்புடன் இணைந்து நிர்மாணிக்கப்படவுள்ள தியான மணிமண்டபத்துடன் கூடிய மஹா சிவலிங்கப்பிரதிஷ்டைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 19.01.2025 அன்று மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மஹராஜ் அவர்களின் தலைமையில் இனிது நடைபெற்றது.
தற்போது ஆரம்ப அத்திவார வேலைகள் நடைபெற்று வருகின்றது. இனித் தொடரும் கட்டுமான மற்றும் அழகியல் சில்வர் பிற்றிங் (Silver Fitting)
வேலைகளுக்கு பெருமளவு நிதி தேவைப்படுவதால், இதனை ஈடுசெய்யும் பொருட்டு கருணை உள்ளம் கொண்டவர்கள் தங்களினால் முடிந்த நிதிப்பங்களிப்புக்களை செய்யமுடியும் என சிவசங்கரி திருமுறை ஓதுவோர் சங்கத்தினர் தெரிவித்தனர்.



