கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் :கிழக்கு ஆளுநர் முஸ்லிம் தரப்புடப்புடனும், தமிழ் தரப்புடனும் இன்று கலந்துரையாடல் – இரு தரப்பு இணக்கத்துடன் தீர்வைக்காண முயற்சி

கடந்த மூன்று தசாப்பதங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதச செயலக விவகாரம் தீர்வின்றி இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதும் . கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான அதிகாரங்கள் திட்டமிடப்பட்டு தடுக்கப்படுவதும் வெளிப்படையான விடயம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் அமைதி வழியில் போராடி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு இரு தரப்புடனும் கலந்துரையாடி நிரந்தரமான தீர்வைப் பெறும் முயற்சியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முன்னெடுத்துள்ளார்.

இன்றைய தினம் முஸ்லிம் தரப்புடன் அவர்களது கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் இடம் பெற்றது. இதில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ,நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹாரீஸ் ,அதாவுல்லா ,கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் லியாகத் அலி உட்பட முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் பலரும் பங்கு பற்றியிருந்தனர்.

முஸ்லிம் தரப்புக்கும் ,தமிழ் தரப்புக்கும் பாதிப்பில்லாதவாறு இரண்டு தரப்புடன் பேசி இதற்கு ஒரு தீர்வைக்காண எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் . இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் வளராதவகையில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என கிழக்கு ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான தலைமையில் ,தமிழ் தரப்புடனும் இன்று கலந்துரையாடல இடம் பெற்றது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் இதில கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் அதிசயராஜ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் உட்பட தமிழ் சிவல் அமைப்பு பிரதிநிதிகளும் பங்கு பற்றியிருந்தனர்.