‘தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் நாங்கள் பிரசாரம் செய்ய வேண்டும். ஏனெனில், இந்த விடயம் கோமாளிக் கூத்து, ஒன்றுக்கும் உதவாத
விஷப் பரீட்சை.’

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

‘மக்கள் மன்றில் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும்
பொது வாக்கெடுப்பும்’ எனும் தலைப்பில் அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக்கள நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் சுமந்திரன்எம்.பி. கருத்துரை வழங்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.