31 ஆம் நாள் நினைவஞ்சலி -அமரர் திருமதி கிருஷ்ணபிள்ளை அன்னபூசணி -22.01.2024

ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் நன்றி நவிலலும்

தோற்றம் 21.10.1950

மறைவு 23.12.2023

பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கிருஷ்ணபிள்ளை அன்னபூசணி
அவர்களின் 31 ம் நாள் அந்தியேட்டி கிரியைகள் நாளை 22/01/2024 அன்று பாண்டிருப்பு இல்லத்தில் நடைபெறும்.

ஆத்மசாந்தி பிரார்த்தனையும், மதியபோசண நிகழ்வும் நடைபெற உள்ளதால் இன் நிகழ்வில் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு அன்னாரின் சிவபதச்செய்தி கேட்டு நேரடியாகவும், தொலைபேசியூடாகவும், சமூக வலைத்தளங்களூடாகவும், இணையத்தளங்களிலும் துயர்பகிர்ந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி.

தகவல் குடும்பத்தினர்.