இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு  சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு நேற்று இடம்பெற்றதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கை காட்டிய முன்னேற்றத்தில் திருப்தி அடைவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, முதல் மதிப்பாய்வின் நிறைவிற்கு அமைய SDR 254 மில்லியன் (சுமார் 337 மில்லியன் அமெரிக்க டொலர்) நிதி வசதியை உடனடியாக இலங்கைக்கு வழங்க அனுமதி அளித்துள்ளது.

இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் விவாக்கப்பட்ட நிதிவசதியின் கீழ் இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதி உதவி  SDR 508 மில்லியன்களாகும்.

இலங்கையின் மைக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கும் மற்றும் வளர்ச்சி சார்ந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்கும் இந்த நிதி வசதி வழங்கப்படுகிறது.