இன்று ஆம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபராக மங்கள விக்ரமாராச்சி கடமை பொறுப்பேற்பு
( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி இன்று (12) வியாழக்கிழமை காலை 09.21 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார்.
கண்டி மத்துகமவைச் சேர்ந்த இவர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தினை சேர்ந்தவராவார். இவர் கல்முனை,மகாஒயா,உகண, பதியத்தலாவ,திகன ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகவும், அனுராதபுரம் மோட்டார் வாகன திணைக்களத்தின் ஆணையாளராகவும் கடமையேறியுள்ளார்.
இவர் இறுதியாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப் பதவியேற்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன்,அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





