பரதக் கலையை கொச்சைப்படுத்திய மௌலவிக்கு எதிராக மட்டக்களப்பில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழரின் தெய்வீக கலைகளில் ஒன்றான பரத கலையை சமூக ஊடகத்தில் கொச்சைப்படுத்தி காணொளி வெளியிட்ட அக்கரைப்பற்று மௌலவிக்கு எதிராக பல எதிர்ப்புக்கள் மேலோங்கி உள்ளன.

நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு விபுலாநந்த அழகியல் கல்லூரியில் பரதக்கலை பயிலும் மாணவர்கள் குறித்த மௌலவிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எமது தெய்வீக கலைகளில் ஒன்றான பரதக் கலையை கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்த மௌலவிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.