தேசிய இளைஞர் பாராளுமன்ற அமர்வில் பரதக் கலை தொடர்பில் அவதூராக பேசிய மௌலவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தேசிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரான கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவை பிரதிநித்துவப்படுத்தும் வி. சரன்தாஸ் தனது கண்டனத்தை அமர்வில் பதிவு செய்தார்.

தேசிய இளைஞர் பாராளுமன்ற அமர்வானது ஜனாதிபதி செயலகம் பழைய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் 2023/11/18 மற்றும் 19 ம் திகதியில் இடம்பெற்றது. அண்மையிலே வெளியிடப்பட்ட பட்ஜெட் சம்பந்தமான கலந்துரையாடல் இடம் பெற்றது. இதில் அரசாங்கத்தால் ஒதுக்கி இருக்கின்ற கிரிக்கெட் விளையாட்டினை அபிவிருத்தி செய்யவும் மைதானங்களை புனர் நிர்மாணம் செய்யவும் 1.5 பில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. எனவே இதனை கிராமிய மட்டம் வரைக்கும் கொண்டு வந்து கிராமிய மட்டத்திலும் கிரிக்கெட் விளையாட்டு மற்றும் மைதானங்களையும் திறன் பட புனர்நிர்மானம் செய்ய வேண்டும் என்றும் இரவு வேளைகளிலே சிறப்பாக விளையாடக்கூடிய மின்னொளி ஊட்டப்பட்ட மைதானங்கள் எமது பிரதேசத்திற்கு வேண்டுமென்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து அண்மையிலே சமூக வலைதளத்தில் மதகுரு ஒருவரால் வெளியிட்ட பாரம்பரிய வரலாற்று நடனம் ஆகிய பரதக்களையினை இழிவுபடுத்தியமைக்காக எதிர்ப்பு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.