இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் 2023/24 ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு

இன்று மாலை கொழும்பு 4 பம்பலபிட்டி சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புமாவட்டக்கிளைக்கான புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது, அதன்படி மீண்டும் தலைவராக
ஜனாதிபதி சட்டத்தரணி திரு K.V.தவராசா ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்,

செயலாளராக திருமதி.மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன்
உபதலைவர்களாக
1.செ.திருச்செல்வன்

 1. க.நித்தியானந்தம்
  உபசெயலாளராக திருமதி பத்மினி சதானந்தன்
  பொருளாளராக ப.பரமேஸ்வரன்
  உபபொருளாளராக சி.கந்தசாமி. ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்,
  மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா உரையாற்றுகையில், தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தமிழரசு கட்சி பாதுகாக்கப்பட வேண்டும் தமிழரச கட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தமிழ் தேசியவாதிகள் அர்ப்பணிப்போடு மக்களுக்கான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும், தமிழ் பேசும் மக்களில் ஒரு பெண் உறுப்பினர் கூட பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காதது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் எதிர்காலத்தில் இந்நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார் நடப்பாண்டு நிர்வாக குழு தமிழ் தேசியத்தை நிலை நிறுத்துவதில் அர்ப்பணிப்போடு பங்காற்றும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்,
  தமிழ் தேசிய அரசியல் செயற்களத்தில் கொழும்புவாழ் தமிழர்களும் பங்காளர்களாக மாறுவதற்கான காலம் கனிந்து விட்டது என்றே இத்தெரிவுகள் நமக்கு பறைசாற்றுகின்றன, புதிய தலைமுறையில் இளைஞர் யுவதிகளை முன்னிறுத்தி பல்வேறு வெற்றிகரமான வேலை திட்டங்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் புதிய நிர்வாக குழுவினால் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிய வருகின்றது