இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட குழுவினர் 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்தனர்.

இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நிதி அமைச்சின் 06 உயர் அதிகாரிகளும் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இவர்கள் இன்று ( 11/01) காலை 08.31 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-192 இல் இந்தியாவின் புதுடில்லியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த குழு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி புறப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்ததன் 200 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நாளை 2ஆம் திகதி வியாழக்கிழமை, கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நாம் 200’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.