-பெரியநீலாவணை எஸ். அதுர்சன்-

களுவாஞ்சிகுடி சைவமகா சபையின் 71 வது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும் களுவாஞ்சிகுடி சீ.மு. இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் சிரேஸ்ட விரிவுரையாளரும் சைவ மகாசபை தலைவருமான கணேசன் மதிசீலன் தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலாநிதி வண்ணமணி குண பாலசிங்கம். பீடாதிபதி கலை கலாச்சார பீடம், மற்றும் சிறப்பு அதிதிகளாக . அம்பிகைபாகன் கந்தவேள் கிராம தலைவர் மற்றும் ஆலய பரிபால சபைதலைவர், .கே. செந்தூரன் திருகோணமலை பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர். டாக்டர் என். நிமோஜன் போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு , எஸ். சத்தியகுமார் இறைவரி திணைக்களம் மட்டக்களப்பு.,.கே. குனநாயகம் கலாச்சார உத்தியோகத்தர் மட்டக்களப்பு. . வி. ரஞ்சிதமூர்த்தி. மட்டக்களப்பு தமிழ் சங்கம். ஆகியோருடன் விசிட அதிதிகள், மற்றும் கௌரவதிகள் ,கௌரவ குருமார்கள் என பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

தேசியக்கொடி, சைவ மகாசபை கொடி, இந்து சமயக் கொடி ஏற்றப்பட்டு மங்கள விளக்கு ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. சைவமா சபையின் 71 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அறநெறி பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும், சமய சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும், அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும், அதிதிகளின் சிறப்புரைகளும் நிகழ்வில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You missed