கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பின் பிரதிநிதி மற்றும் அமைப்பின் குழுவினர் விஜயம்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பல்வேறு வழிகளில் உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினுடைய பிரதிநிதியான Dr. முரளி ராமலிங்கம் மற்றும் அமைப்பின் குழு உறுப்பினர்களும் 2023.10.25 நேற்று கள விஜயம் மெற்கொண்டனர்.

அவர்களை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr. இரா. முரளீஸ்வரன் தலைமையில் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதோடு தங்களது வைத்தியசாலையின் உதவி பெறப்பட்ட பிரிவுகள் காண்பிக்கப்பட்டு அப் பிரிவுகளின் முன்னேற்றம் பற்றிய விளக்கமும் அளிக்கப்பட்டன.

மேலும் இந் நிகழ்வில் வைத்தியசாலையின் தாதிய பரிபாலகர், நிர்வாக உத்தியோகத்தர், மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.