கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிராக இன்றும் அரங்கேற இருந்த சூழ்ச்சி -ஆத்திரமடைந்து குழுமிய பிரதேச மக்கள்- நடந்தது என்ன?

அனைத்து தகுதிகளுடனும் இயங்கி வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை பறித்து மக்களுக்கான சேவையை வழங்குவதை தடுக்கும் இனவாத அரசியல் சூழ்ச்சிகள் தொடர்ந்தவண்ணமே உள்ளமை யாவரும் அறிந்ததே.

கல்முனை தெற்கு பிரதேச செயலகம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளில் பல்வேறு இடையூறுகளை செய்துவரும் நிலையில் இன்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளரை கல்முனை தெற்கு பிரதெச செயலகத்துக்கு அழைத்து செல்ல இருந்த போது மக்கள் பிரதேச செயலகத்தில் பல நூற்றுக்கணக்கில் குவிந்து. எமது பிரதேச செயலகத்துக்கு தலைமை மாவட்ட செயலகமே கல்முனை தெற்கு இல்லை என்று கூறியதுடன், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கும் வடக்கு பிரதேச மக்களுக்கும் எதிராக இடம் பெறும் சூழ்ச்சிகள் அநீதிகளை அரசாங்க அதிபருக்கு விபரித்தனர்.

இதன் போது அங்கு ஒன்று திறண்ட மக்கள், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மக்களுக்கான சேவையை சுதந்திரமாக வழங்குவதற்கு வழிகளை ஏற்படுத்த வேண்டும் எனகோரிக்கை முன் வைத்ததுடன் கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் கல்முனை வடக்கு பிரதேச செயலக செயற்பாடுகளில் மூக்கு நுழைத்து இடையூறு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்த அரசாங்க அதிபர் இவற்றுக்கு தன்னால் முடிந்த தீர்வை பெற்று தருவதாக வாக்குறுதியளித்து சென்றதும் மக்களும் கலைந்து சென்றனர்.