கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால், அரச உத்தியோகத்தர்களின் பல்துறைசார் திறனை வெளிப்படுத்தும் நோக்கில்
பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களிடையே
மாகாண மட்ட பாடல் போட்டி நடத்தப்பட்டிருந்தது.

இதில் வெற்றி பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான மதிப்பளிக்கும் நிகழ்வு , 2023.10.07 ஆம் திகதி சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் .சரவணமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட பாடகர்கள்( பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் ) தம் பாடல் திறனை வெளிப்படுத்தி அவையினரை மகிழ்ச்சிப்படுத்தினர்.