மட்டு வவுணதீவில்; மோட்டர்சைக்கில் விபத்தில் படுகாயமடைந்த சப் இன்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

((கனகராசா சரவணன் )

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மோட்டர்சைக்கிள விபத்தில் காயமடைந்த நிலையில் மட்டு போதனாவைத்தியசாலையில்  அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கட்ட பொலிஸ் சப்இன்பெக்கடர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை (11) அதிகாலையில் உயிரிழந்துள்ளார்.

மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பிரிவிலல் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த நாற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சப்இன்பெக்டர் சபேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த சனிக்கிழமை வவுணதீவிலுள்ள தனது பண்ணைக்கு மோட்டர்சைக்கிளில் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வவுணதீவு பகுதியில் அவர் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டதையடுத்து மோட்டர்சைக்கிளில் இருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து அவரை போதனாவைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாகவும் அவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவரின் இறுதிகிரிகை பொலிசாரின் மரியாதையுடன்  நாளை இடம்பெறவுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.