கல்முனைத் தொகுதிக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சி கிளைக்கு புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டது.

நேற்று சனிக்கிழமை மாலை பாண்டிருப்பு அண்ணா மன்ற மண்டபத்தில் முன்னாள் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கல்முனை தொகுதி உபதலைவர் பாசம் புவிராஜா தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


புதிய நிருவாகம்
தலைவராக அ.நிதான்சன் செயலாளராக வே.அரவிந்தன் பொருளாளராக கே.சசிதரன்
உபதலைவராக கே.குலசேகரம் உபசெயலாளராக முன்னாள் மாநகர சபை உறுப்பினர் எஸ்.செல்வநாயகம் ஆகியோருடன் மேலும் 10 நிருவாக சபை உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்