சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் நிறைவேற்று பணிப்பாளராக இரா.விஜியகுமாரன் தெரிவு!

தாயகத்திலும் வெளிநாட்டிலும் நிருவாக கட்டமைப்பை உருவாக்கி இலங்கையின் பல பாகங்களிலும் சமூக சேவைகளை முன்னெடுத்துவரும் சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இரா.விஜியகுமாரன் (விஜி ) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ் அமைப்பின் பொதுச்செயலாளர் மேனன் எமது ஊடகத்துக்கு இவ்வாறு தெரிவித்தார்.

தாயகத்திலிருந்து இடம் பெயர்ந்து கடந்த 32 வருடங்களாக சுவிஷ் நாட்டில் தனது மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் அம்பாறை மாவட்டம் கல்முனை பாண்டிருப்பை தனது சொந்த இடமாகக் கொண்ட மக்கள் நேயன் இரா.விஜயகுமாரன் அவர்கள் தமது குடும்பத்தாருடன் கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக தாயக உறவுகளுக்கான கல்வி, வாழ்வாதாரம், சுகாதரம், வீடமைப்பு என பல்வேறு பரிமாணங்களில் பலநூறு உதவித்திட்டங்களை வடகிழக்கிலுள்ள பல்வேறு அமைப்புக்களினூடாக வழங்கிக் கொண்டிருப்பவர் .

அந்த வகையில் அவரின் உயரிய அர்ப்பணிப்பை கெளரவித்தும் அவரது தாயக உறவுகள் மீதான பற்றை கண்ணியப்படுத்தியும் எமது அமைப்பினூடாக கடந்த 6 வருடங்களாக அவர் வழங்கி வரும் ஒப்பற்ற தனித்துவமான சேவைகளை நெஞ்சில் நிறுத்தி நமது சொந்தங்களில் மகிழ்ச்சியான வாழ்வியலுக்காக சர்வதேச தளத்தில் இயங்கும் பல்வேறு அமைப்புக்களில் ஒன்றான நாம் எமது நிறைவேற்றுப் பணிப்பாளராக எமது அமைப்பின் நிறைவேற்றுக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.